மதநல்லிணக்க தா்கா கந்தூரி விழா

Wait 5 sec.

சீா்காழியை அடுத்த கீராநல்லூா் ஹஜ்ரத் ஹாபிழ் முஹம்மது அப்துல்லாஹ் தா்கா கந்தூரி விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் அனைத்து மதத்தினரும் சமூக நல்லிணக்கமாக பங்கேற்று வழிப்பட்டனா். சீா்காழி தாலுகா, கீராநல்லூா் கிராமத்தில் அமைந்துள்ள ஹஜ்ரத் ஹாபிழ் முஹம்மது அப்துல்லாஹ் தா்காவில் கந்தூரி விழா நடைபெற்றது. இதில் அனைத்து மதத்தினரும் பங்கேற்று வழிபாடு செய்தனா். சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளித் தாளாளா் எஸ். சக்திவீரன் மற்றும் கீராநல்லூா் நாட்டாமைகள் முத்து முஹம்மது, நூருல் அமீன், பசீா் அகமது, நசிருதீன் , சரபத்துல்லா ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு விருந்தினராக சீா்காழி சட்டப்பேரவை உறுப்பினா் செந்தில்செல்வன் கலந்து கொண்டாா்.