ஆர்.எஸ்.எஸ். கோட்டையான நாக்பூரை தக்கவைத்த காங்கிரஸ்! எம்எல்சி தேர்தலில் முதல் வெற்றி!!

Wait 5 sec.

ஆர்எஸ்எஸ் கோட்டையாக கருதப்படும் நாக்பூர் பிரிவு பட்டதாரிகள் தொகுதியில் பாஜகவைத் தோற்கடித்து காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாக 2-ஆவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.உத்தரப் பிரதேசம், பிகார், மகாராஷ்டிரம், கர்நாடகம் ஆகிய 4 மாநில சட்ட மேலவைகளில் 28 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றன. வாக்குச் சீட்டு முறையில் நடைபெற்ற இந்தத் தேர்தலில் மொத்தம் 28 ஆசிரியர்கள், பட்டதாரிகள் தொகுதிகளுக்கு கடந்த வெள்ளிக்கிழமை தேர்தல் நடைபெற்றது. உத்தரப் பிரதேசத்தில் 11 (ஆசிரியர்கள் 6, பட்டதாரிகள் 5), பிகாரில் 8 (ஆசிரியர்கள், பட்டதாரிகள் தலா 4), மகாராஷ்டிரத்தில் 5 (ஆசிரியர்கள் 2, பட்டதாரிகள் 3), கர்நாடகத்தில் 4 (ஆசிரியர்கள், பட்டதாரிகள் தலா 2) தொகுதிகளுக்கு வாக்குச்சீட்டு முறையில் நடத்தப்பட்ட இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது. பெரும்பாலான இடங்களுக்கு புதன்கிழமை முடிவுகள் அறிவிக்கப்பட்டன. நான்கு மாநில சட்டமேலவை தேர்தல்களில் மிகப்பெரிய பின்னடவைச் சந்தித்த காங்கிரஸ் கட்சி கர்நாடகத்தில் நான்கு தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியது.அதேநேரத்தில் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) கோட்டையாகக் கருதப்படும் மகாராஷ்டிர சட்ட மேலவையின் நாக்பூர் பிரிவு பட்டதாரிகள் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நீண்ட நேரம் நடைபெற்றது. நீண்ட இழுபறிக்குப் பின்னர் காங்கிரஸ் வேட்பாளர் அபிஜித் கோவிந்தராவ் வஞ்சாரி, பாஜகவின் சுதாகர் கோஹ்லேவை 3,271 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி வாகை சூடினார். வஞ்சாரி, கடந்த 2020-ஆம் ஆண்டில் நாக்பூர் பட்டதாரிகள் தொகுதியில் வெற்றி பெற்றிருந்தார். மீண்டும் வெற்றி பெற்று தனது செல்வாக்கை நிரூபித்துள்ளார்.மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸின் சொந்த ஊராகவும், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களவைத் தொகுதியாகவும் இருக்கும் நாக்பூரில் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்றிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. #WATCH | Nagpur, Maharashtra: Congress candidate Abhijit Vanjari has taken a lead over the BJP’s Sudhakar Kohale during the counting of second-preference votes in the Graduates' MLC election.Congress candidate Abhijit Vanjari said, "The BJP exerted all its might—all their… pic.twitter.com/5TRjbmntmH— ANI (@ANI) October 28, 2026Congress leader Abhijit Govindrao Wanjari has won the Nagpur Division Graduates' constituency in the Maharashtra Legislative Council for a second consecutive term. A lawyer and educationist, he first won the seat in 2020 as a Maha Vikas Aghadi candidate.