சென்னை: ரூ.100 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பிணை கோரிய வழக்கு ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை, திமுக எம்எல்ஏ ஓ.பன்னீர்செல்வம் வெற்றிக்கு எதிராக மிலானி என்பவர் தொடர்ந்த தேர்தல் வழக்கு உள்பட முக்கிய வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (அக்.29) விசாரணைக்கு வருகின்றன.அதில் சில குறிப்பிடத்தக்க வழக்குகளின் பட்டியல்... * ரூ.100 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பிணை கோரிய தாக்கல் செய்துள்ள மனு, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி எல்.எஸ்.சத்தியமூா்த்தி முன் விசாரணை.* இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய கோரி பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தொடர்ந்த வழக்கு* சட்டவிரோத மணல் கடத்தலுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடந்த 2017-இல் தொடர்ந்த வழக்கு* ரூ.100 கோடி மோசடி வழக்கு முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் மீது பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரி அன்பில் மகேஸ் தாக்கல் செய்த வழக்கு* திமுக எம்எல்ஏ ஓ.பன்னீர்செல்வம் வெற்றிக்கு எதிராக மிலானி என்பவர் தொடர்ந்த தேர்தல் வழக்கு* நூறு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரிய வழக்கில், முன்னாள் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் வாக்குமூலத்தை விடியோ பதிவு செய்யக் கோரி ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்படவிருக்கிறது.Which cases are up for hearing at the Madras High Court today (Oct 29?முன்னாள் அமைச்சர் கே.என். நேரு வீட்டில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!