சமையலறைக்கு இந்த ஒன்றை வாங்கிவிட்டால், பல ஆண்டுகளுக்கு அது பற்றி சிந்திக்கவே வேண்டாம் என்பது போல எதையாவது வாங்க வேண்டும், வரும் தீபாவளியை மறக்க முடியாததாக்க வேண்டும் என்று நினைத்தால் உங்கள் தேர்வு கேஸ் அடுப்பாக இருக்கலாம்.ஒருவேளை, பல ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய அடுப்பை நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருந்தால், நிச்சயம் அதனை மாற்றும் நேரம் வந்துவிட்டது என்பதை உணருங்கள்.அடிக்கடி பர்னர் மாற்றுவது, எரிவாயு கசிவு போன்றவை நேரிட்டால் இதுதான் சரியான நேரம்.தற்போது நான்கு பர்னர், மூன்று பர்னர், தானாகவே பற்றும் ஸ்டவ் என வகைக்கு ஒன்று விற்பனைக்கு வந்துவிட்டது.பழைய ஸ்டீல் அடுப்புகளை என்னதான் துடைத்தாலும் அது பழையது என காட்டிக் கொடுத்துவிடும். ஆனால், தற்போது வரும் கண்ணாடி அடுப்புகள் ஒரு முறை துணியால் துடைத்தால் போதும் மின்னும்.ஒரு சமையலறையில் இருக்கும் அடுப்பை வைத்தே அந்த வீட்டை பலரும் எடைபோட்டுவிடுவார்கள். எனவே, பழைய ஸ்டவ்களை மாற்றிவிட்டு தற்போது வரும் புதிய அடுப்புகளை உங்கள் வீட்டுக்கு தீபாவளிப் பரிசாக வாங்கிச் செல்லலாம்.ஒன்று மட்டும் கவனிக்க... மூன்று பர்னர்கள் கொண்ட அடுப்பை வாங்கும்போது, அதனதன் அருகே வால்வுகள் இருப்பது போல பார்த்து வாங்குவது நலம்.மூன்று வால்வுகளும் ஒரே இடத்தில் இருந்தால் பயன்படுத்த சற்று சிக்கலாக இருக்கிறது. வேறொரு வால்வை திறந்துவிட்டு அதற்கு தொடர்பில்லாத பர்னரை பற்றவைக்கும் அபாயமும் உள்ளது. எனவே கவனமாகப் பார்த்து வாங்கவும்.