வங்கக் கடலில் உருவான ஒர்னாப் புயல் கணிக்கப்பட்டதை விட முன்கூட்டியே கரையைக் கடக்கத் தொடங்கிய நிலையில் சென்னையில் கடற்கரைப் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. புதன்கிழமை காலை மிக தீவிர புயலாகக் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை இரவே ஆந்திரத்தில் கரையைக் கடக்கத் தொடங்கியிருக்கிறது. இதன் மையப்புள்ளி நள்ளிரவு 2 மணி முதல் 4 மணி வரை கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுகிறது. புயலாக உருவாகி 18 மணி நேரத்தில் தீவிரமடைந்து இந்த ஒர்னாப் புயலானது கரையைக் கடக்கத் தொடங்கியிருக்கிறது. இதன் காரணமாக சென்னை எண்ணூர் பகுதியில் கடல் சீற்றம் அதிகரித்து, கடல் அலைகள் கடற்கரைச் சாலையைத் தாண்டி வந்ததால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். கடற்கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் கடல் அலைகளின் தாக்கத்தால் கவிழ்ந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடல் சீற்றம் இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எண்ணூர் கடற்கரைச் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, அந்த வழியாகச் செல்லும் வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளன. கடல் சீற்றம் நிலவும் பகுதிகளுக்குப் பொதுமக்கள் செல்வதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, கடல் அலைகளைப் படம் எடுக்கவும், செல்ஃபி எடுக்கவும் ஆபத்தான பகுதிகளில் நிற்பதைத் தவிர்க்க வேண்டும். காவல்துறையினர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வழங்கும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். புயல் மற்றும் கடல் சீற்றம் தொடர்பான அதிகாரப்பூர்வ வானிலை அறிவிப்புகளை இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இணையதளம் வாயிலாகத் தெரிந்துகொள்ளலாம்.As Cyclone Arnab, which formed in the Bay of Bengal, began making landfall earlier than predicted, coastal areas in Chennai are witnessing rough seas.ஆந்திரம் நோக்கி ஒர்னாப் புயல்! சென்னையில் அடுத்த 4 நாள்களுக்கு வெய்யில்!