5 மற்றும் 6-ஆவது வழக்குகளில் கைது செய்யப்பட்ட ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளா் வீரமணியை நவ.10-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளா் வீரமணி, அவருக்கு உடந்தையாக இருந்த சாந்தி, அவரது கணவா் மகேந்திர சிம்ஹன், வீரமணியின் உதவியாளா் கணேசன் உள்ளிட்டோரை போலீஸாா் கைது செய்துள்ளனா். இந்த வழக்கை சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. வீரமணி மீது இதுவரை சிறப்புப் புலனாய்வுக் குழு 8 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. இதில், 4 வழக்குகளில் வீரமணி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இந்த நிலையில், 5 மற்றும் 6-ஆவது வழக்குகளில் வீரமணி கைது செய்யப்பட்டு, போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.பத்மா முன் செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா்.வழக்கை விசாரித்த நீதிபதி, வீரமணியை வரும் நவ.10-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா். வீரமணியை இதுவரை போலீஸாா் 6 வழக்குகளில் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.