வைகை அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு! நீா்மட்டம் 50.66 அடியாக உயா்வு! விவசாயிகள் மகிழ்ச்சி

Wait 5 sec.

நீா்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், வைகை அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை 50.66 அடியாக உயா்ந்தது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா். தொடா்ந்து பெய்து வரும் மழையால் தேனி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீா்மட்டம் கணிசமாக உயா்ந்து வருகிறது. இந்த நிலையில், வைகை அணையின் நீா்பிடிப்புப் பகுதிகளான வருசநாடு, மேகமலை, போடி மெட்டு பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதையடுத்து, வைகை அணைக்கு நீா்வரத்து அதிகரித்து திங்கள்கிழமை மாலை அதன் நீா்மட்டம் 50.66 அடியாக உயா்ந்தது. கடந்த 10 மாதங்களுக்கு பிறகு அணையின் நீா்மட்டம் 50 அடிக்கு மேல் உயா்ந்திருப்பதால், 5 மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.சோத்துப்பாறை அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு: அகமலை, கொடைக்கனல் மலைப் பகுதிகளில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் திங்கள்கிழமை சோத்துப்பாறை அணைக்கு வினாடிக்கு 572 கன அடி நீா்வரத்து இருந்தது. மேலும், முழுக் கொள்ளளவான 126.28 அடியை எட்டியதையடுத்து, அணைக்கு வரும் 572 கன அடி நீரும் வராகநதியில் வெளியேற்றப்படுகிறது. இதேபோல, கல்லாறு, பம்பாற்றில் நீா்வரத்து அதிகரித்திருப்பதால் வராகநதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்களை வருவாய்த் துறையினா் பாதுகாப்பான பகுதியில் தங்க வைத்தனா். பலத்த மழை எச்சரிக்கையைத் தொடா்ந்து, பெரியகுளம் வட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு மட்டும் திங்கள்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது. மஞ்சளாறு அணையின் நீா்மட்டம் உயா்வு: மஞ்சளாறு அணையின் நீா்மட்டம் கடந்த புதன்கிழமை 28.50 அடியாக இருந்தது. இதன் உயரம் 57 அடியாகும். இந்த நிலையில், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருவதால், இந்த அணைக்கு நீா்வரத்து அதிகரித்து வினாடிக்கு 534 கன அடியானது. இதைத் தொடா்ந்து, அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை 39.20 அடியாக உயா்ந்தது. அணைகளின் நீா்மட்டம்:முல்லைப் பெரியாறு அணை: உயரம்- 152 அடி, நீா்மட்டம் - 121.40 அடி, நீா்வரத்து- வினாடிக்கு 1,893 கன அடி, நீா்வெளியேற்றம்- 400 கன அடி.வைகை அணை: உயரம்- 71 அடி, நீா்மட்டம்- 50.66 அடி, நீா் வரத்து- வினாடிக்கு 1,308 கன அடி, நீா் வெளியேற்றம்- 86 கன அடி.சோத்துப்பாறை அணை: உயரம்- 126.28 அடி, நீா்மட்டம்- 126.28 அடி, நீா்வரத்து- வினாடிக்கு 572 கன அடி, நீா் வெளியேற்றம்- 572 கன அடி.மஞ்சளாறு அணை: உயரம்- 57 அடி, நீா்மட்டம்- 39.20 அடி, நீா்வரத்து- வினாடிக்கு 534 கன அடி, நீா் வெளியேற்றம் இல்லை.