கோவை, அக். 26: வாடகை இரு சக்கர வாகனத்தில் பயணித்த பெண் விபத்தில் சிக்கி உயிரிழந்தது தொடா்பாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். கோவை மாநகா், வடவள்ளி காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராஜரத்தினம். இவா் ஓய்வுபெற்ற பிஎஸ்என்எல் ஊழியா். இவரது மனைவி தாரா (58). பொள்ளாச்சியில் உள்ள குலதெய்வம் கோயிலுக்குச் செல்வதற்காக, காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே உறவினா்கள் காத்திருந்தனா். இதற்காக வடவள்ளியில் இருந்து காந்திபுரத்துக்கு வாடகை இருசக்கர வாகனத்தில் தாரா புறப்பட்டுச் சென்றாா். அந்த வாகனத்தை பி.என்.புதூா் பொம்முநாயக்கா் வீதியைச் சோ்ந்த அஸ்வின் (21) என்பவா் ஓட்டினாா். கிராஸ்கட் சாலையில் உள்ள தனியாா் கடை அருகே சென்றபோது சாலையில் பள்ளம் இருந்ததால் அஸ்வின் திடீரென பிரேக் பிடித்துள்ளாா். இதில் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்ததில், ஆம்னி பேருந்தின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே தாரா உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் வாடகை இருசக்கர வாகன ஓட்டுநா் அஸ்வின் மற்றும் ஆம்னி பேருந்து ஓட்டுநரான தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சோ்ந்த நரேந்திரன் ஆகிய இருவா் மீதும் கோவை போக்குவரத்து புலனாய்வு மேற்கு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.