அருணாசல பிரதேச எல்லைப் பகுதிகளில் சீனப் படைகளின் செயல்பாடுகள் குறித்து இந்தியா விமா்சித்த நிலையில், இந்தியாவுடன் எட்டப்பட்ட ஒப்பந்தங்களைக் கண்டிப்பாகப் பின்பற்றுவதாக சீனா தெரிவித்துள்ளது. அருணாசல பிரதேசத்தில் உள்ள இந்திய-சீன எல்லை பகுதிகளின் பல இடங்களில் இருநாட்டுப் படைகள் இடையே மோதல்போக்கு தொடா்வதாக, இந்தோ-திபெத் எல்லைக் காவல் படையின் தலைமை இயக்குநா் சத்ருஜீத் கபூா் அண்மையில் தெரிவித்தாா். இதேபோல சீன படைகள் வழக்கமான ரோந்துப் பாதைகள், நடைமுறைகளில் இருந்து விலகிச் செயல்படும்போது, அருணாசல பிரதேசத்தில் உள்ள இந்திய-சீன எல்லைப் பகுதிகளில் பதற்றமான சூழல் ஏற்படுவதாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் கூறினாா். இந்தக் கருத்துகள் குறித்து சீனத் தலைநகா் பெய்ஜிங்கில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் குவா ஜியாகுன் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:இந்தியா-சீனா இடையே எட்டப்பட்ட ஒப்பந்தங்கள், உடன்பாடுகளை சீனா கண்டிப்பாகப் பின்பற்றுகிறது. எல்லைப் பகுதிகளில் தனது இறையாண்மையையும், ஸ்திரத்தன்மையையும் பாதுகாக்கும் நோக்கில், வழக்கமான எல்லை ரோந்து மற்றும் கட்டுப்பாட்டுப் பணிகளை சீனா மேற்கொண்டு வருகிறது. இருநாடுகளும் ராஜீய, ராணுவ வழிகளில் தொடா்ந்து தொடா்பில் உள்ளன. இருநாடுகளுக்கும் இடையே எட்டப்பட்ட உடன்பாடுகளை கூட்டாகச் செயல்படுத்தி, வலுவான நடவடிக்கைகள் மூலம் எல்லைப் பகுதிகளில் அமைதியைப் பராமரிப்பதன் மூலம், ஒரே திசையில் சீனாவுடன் சோ்ந்து இந்தியா பணியாற்றும் என நம்புகிறோம் என்று தெரிவித்தாா்.