மண்சரிவு: உதகை மலை ரயில் சேவை அக். 29 வரை ரத்து!

Wait 5 sec.

கனமழை மற்றும் மண்சரிவு காரணமாக உதகை மலை ரயில் சேவை மேலும் 3 நாள்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கனமழையால் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் மரங்கள் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களையும் மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்தத் தடை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் அங்கு கனமழை பெய்ததால் ரயில் தண்டவாளங்களில் கற்கள் மற்றும் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மலை ரயில் சேவை இரண்டு நாள்களுக்கு ரத்து செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து பாதுகாப்பற்ற சூழல் இருப்பதால உதகை - மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் சேவை அக். 29 வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Heavy rain, landslides: Ooty mountain train service cancelled until Oct 29உங்க சேஃப்டிக்கு இந்த கலெக்டர் அங்கிள் கேரண்டி! விடுமுறை கோரிய மாணவர்களுக்கு பதில்!