உதகை மலை ரயில் சேவை அக். 29 ஆம் தேதி வரை ரத்து!

Wait 5 sec.

தொடர்மழை காரணமாக, உதகை மலை ரயில் சேவை அக். 29 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக குன்னூர், கோத்தகிரி ஆகிய பகுதிகளில் மழையின் தாக்கம் அதிக அளவில் உள்ளது.இதனால், கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் மண் சரிவு, மரங்கள் வேரோடு சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்களை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டதால், கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.மண் சரிவை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினர், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில், மேட்டுப்பாளையம் - குன்னூர் பகுதிகளில் தொடர் கனமழை பெய்ததன் காரணமாக, ரயில் தண்டவாளங்களில் பாறை, மண் சரிந்ததால் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.சீரமைக்கும் பணிகளில் ரயில்வே ஊழியர்கள், தொடர்ந்து ஈடுபட்டு வருவதால், வரும் 29 ஆம் தேதி வரை மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.Due to continuous rain, the Udhagamandalam (Ooty) mountain railway service has been cancelled until October 29.சென்னை - அரக்கோணம் ஏசி ரயில் சேவை தொடக்கம்! கட்டண விவரம் வெளியீடு!