டாக்டர் அதிதி ஷங்கர்!

Wait 5 sec.

நடிகை அதிதி ஷங்கர் மருத்துவர் தோற்றத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அதிதி ஷங்கர். தன் துறுதுறுப்பான பேச்சால் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றவர்.தொடர்ந்து, மாவீரன் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார். அப்படம், விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக வெற்றிப்படமானது. விஷ்ணுவரதன் இயக்கத்தில் நேசிப்பாயா படத்தில் நடித்திருந்தார். ஆனால், இப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.இறுதியாக, வெளியான ஒன்ஸ் மோர் திரைப்படமும் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இருந்தாலும் அதிதியின் நடிப்பு பாராட்டுகளைப் பெற்றது. இந்த நிலையில், மருத்துவம் படித்த அதிதி ஷங்கர் மருத்துவர் தோற்றத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, ‘டாக்டர் அதிதி’ எனக் குறிப்பிட்டுள்ளார். 1000 முறைகூட விஜய் தேவரகொண்டாவைத் திருமணம் செய்வேன்... பதிலடி கொடுத்த ரஷ்மிகா! Actress Aditi Shankar has shared a photograph in which she appears as a doctor.