செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!

Wait 5 sec.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் இன்று (அக். 26) ஆய்வு செய்தார். வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதையடுத்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதையடுத்து பல்வேறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து செம்பரம்பாக்கம் ஏரியில் பாதுகாப்புப் பணி குறித்து ஆய்வு செய்ய முதல்வர் விஜய் இன்று வருகை தந்தார். அமைச்சர்கள் ரஞ்சித் குமார், தென்னரசு ஆகியோர் முதல்வரை வரவேற்றனர். செம்பரம்பாக்கம் ஏரி நீர் நிலவரம் குறித்து நீர்வளத் துறை அதிகாரிகளிடம் முதல்வர் விஜய் கேட்டறிந்தார். ஏரியின் 5 கண், 19 கண் மதகுகள் பகுதியில் முதல்வர் ஆய்வு செய்தார். ஏரிக்கு தற்போது நீர்வரத்து 150 கனஅடியாக உள்ள நிலையில் 208 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.ஏரியின் மொத்த உயரம் 24 அடி என்ற நிலையில் தற்போது நீர் இருப்பு 14.88 அடியாக உள்ளது. CM Vijay inspects Chembarambakkam Lakeஉங்க சேஃப்டிக்கு இந்த கலெக்டர் அங்கிள் கேரண்டி! விடுமுறை கோரிய மாணவர்களுக்கு பதில்!