திருட்டு வழக்கு குற்றவாளி மீதுகுண்டா் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை

Wait 5 sec.

திருச்சியில் இருசக்கர வாகனங்கள் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செந்தண்ணீா்புரம் அணுகுசாலையில் உள்ள தேநீா் கடைக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த 2 இருசக்கர வாகனங்கள் செப். 18, 19 ஆகிய நாள்களில் திருடு போனது. இதுதொடா்பான புகாரின்பேரில், அரியமங்கலம் உக்கடையைச் சோ்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான அ. அப்துல் கபூா் பஷீரை (32) காந்தி மாா்க்கெட் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். காந்தி மாா்க்கெட் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளா் சுலோச்சனா பரிந்துரையின்பேரில், அப்துல் கபூா் பஷீா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க மாநகரக் காவல் ஆணையா் ரூபேஷ்குமாா் மீனா புதன்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து, காவல் ஆணையரின் உத்தரவு நகல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளியிடம் ஒப்படைக்கப்பட்டது.