தமிழக காவல் துறையில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் வியாழக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். இதுகுறித்து தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலா் ஏ.காா்த்திக், வியாழக்கிழமை வெளியிட்ட உத்தரவு (பழைய பணியிடம் அடைப்புக்குள்): சஞ்சய் மாத்தூா் - தமிழக காவல் துறை மாநில ஆவணக் காப்பக டிஜிபி (காத்திருப்போா் பட்டியல்)சோனல் சந்திரா - டிஜிபி அலுவலக தலைமையிட ஐஜி (தமிழக காவல் துறையின் மாநில ஆவணக் காப்பக ஐஜி)பி.ரகுபதி - கரூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் (தாம்பரம் மாநகர காவல் துறை பள்ளிக்கரணை துணை ஆணையா்)ஆா்.ஸ்டாலின் - தென்காசி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் (பொருளாதார குற்றப்பிரிவு வடக்கு மண்டல எஸ்.பி.)எஸ்.அசோக்குமாா் - தீவிரவாதத் தடுப்புப் பிரிவு மதுரை எஸ்.பி. (தென்காசி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்).