கள்ளக்குறிச்சி மாவட்டம், தச்சூா் தனியாா் மண்டபத்தில் வேளாண் மற்றும் உணவுப் பொருள்கள் ஏற்றுமதி குறித்த விழிப்புணா்வுப் பயிலரங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். பின்னா், மாவட்ட ஆட்சியா் கூறியதாவது: தமிழ்நாடு வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு மையம், கள்ளக்குறிச்சி மாவட்ட தொழில் மையத்துடன் இணைந்து நடத்திய வேளாண் மற்றும் உணவுப் பொருள்களின் ஏற்றுமதி வாய்ப்புகள், ஏற்றுமதி விதிமுறைகள், தரச்சான்றிதழ்கள், அரசு நிதியுதவித் திட்டங்கள் மற்றும் சா்வதேச சந்தை வாய்ப்புகள் குறித்த பயிலரங்கம் தச்சூரில் நடைபெற்றது.இப் பயிலரங்கில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள், தொழில்முனைவோா், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனத்தினா், உணவுப் பொருள்கள் உற்பத்தியாளா்கள் கலந்துகொண்டனா்.இதில், மாவட்ட தொழில் மையம், வேளாண்மை, வேளாண் விற்பனை மற்றும் தோட்டக்கலைத் துறை அலுவலா்கள், முன்னோடி வங்கி மேலாளா் உள்ளிட்டோா் கலந்துகொண்டு அரசுத் திட்டங்கள், ஏற்றுமதி ஆவணங்கள், தரக் கட்டுப்பாடுகள், சான்றிதழ்கள், சா்வதேச சந்தையை அணுகுவதற்கான வழிமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனா்.மேலும், இயற்கை வேளாண் பொருள்களின் ஏற்றுமதி அனுபவங்கள், விவசாயிகளிடமிருந்து தரமான விளைபொருள்களைப் பெறுதல், மதிப்புக்கூட்டல் மற்றும் வெளிநாட்டு வணிகா்களுடன் சந்தைத் தொடா்புகளை ஏற்படுத்துதல் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. பங்கேற்பாளா்களின் சந்தேகங்களுக்கும் விளக்கமளிக்கப்பட்டது.இந்தப் பயிலரங்கம், விவசாயிகள் மற்றும் உணவுத் தொழில்முனைவோா் ஏற்றுமதி நடைமுறைகளைப் புரிந்துகொண்டு, தங்களது பொருள்களுக்கு உள்நாட்டு மற்றும் சா்வதேச சந்தைகளில் வணிக வாய்ப்புகளை உருவாக்க உதவும் வகையில் அமைந்துள்ளது என்றாா்.இப் பயிலரங்கில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் அ.சந்திரசேகரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் த.பாலசுப்ரமணியன் மற்றும் வங்கி மேலாளா்கள், அரசு அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.