செய்யறிவு தாக்கம் காரணமாக தகுதியுள்ள 60,000 ஊழியர்களை தாமாக முன்வந்து வேலையைவிட்டு விலகுவதற்கான வாய்ப்பை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வழங்கியுள்ளது.உலகளவிலுள்ள முன்னணி நிறுவனங்கள் செய்யறிவு செலவினங்களை அதிகரித்து வரும் வேளையில், பிற செலவுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கி தொடக்க நிலை மற்றும் நடுநிலை தொழில்நுட்ப ஊழியர்களிடையே ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான அமேசான், ஆரக்கிள் போன்ற நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை தொடங்கியிருக்கும் நிலையில், மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் ஆட்குறைப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.ஜூன் 2026 நிலவரப்படி, உலகளவில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் 2.23 லட்சம் பேர் முழுநேர ஊழியர்களாக பணியாற்றி வந்தனர்.இந்த நிலையில், இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் கனடா நாடுகளைச் சேர்ந்த தகுதியுள்ள 60,000 ஊழியர்களுக்கு தாமாக முன்வந்து பணியிலிருந்து விலகிக் கொள்வதற்கான வாய்ப்பை அந்நிறுவனம் வழங்கியுள்ளது.ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலில், தாமாக முன்வந்து நிறுவனத்திலிருந்து வெளியேறும் ஊழியர்களுக்கு பணிநீக்க இழப்பீடு உள்ளிட்ட சலுகைகளும், தொழில் மாற்றத்துக்கான உதவியும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டிசம்பர் முதல் வாரத்துக்குள் முடிவெடுக்க காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வெளியேற விரும்பும் ஊழியர்கள் டிசம்பர் 31 அன்று விடுவிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தரவு மையங்கள், விற்பனை, மார்க்கெட்டிங், தரவு பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.AI impact! Microsoft advises 60,000 employees to resign voluntarily!ஆவின் பால் பொருள்களின் விலை அதிரடி உயர்வு! நாளை முதல் அமல்!