பங்குச்சந்தை சரிவுடன் தொடக்கம்!ஐடி, எண்ணெய் & எரிவாயு பங்குகள் வீழ்ச்சி!

Wait 5 sec.

இந்த வாரத்தின் முதல் நாளான நேற்று பங்குச்சந்தைகள் சரிவுடன் தொடங்கினாலும் உயர்ந்து முடிந்தன. தொடர்ந்து இன்று (அக். 27) இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 73,484.38 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 10.30 மணி நிலவரப்படி 224.40 புள்ளிகள் சரிந்து 73,382.35 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகிறது.அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 58.20 புள்ளிகள் குறைந்து 22,695.00 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.துறைவாரியாக, நிஃப்டி ஐடி, எண்ணெய் & எரிவாயு குறியீடுகள் முறையே 1.6 சதவீதம், 0.8 சதவீதம் சரிவைச் சந்தித்தன. தொடர்ந்து நிஃப்டி நுகர்வோர் பொருள்கள் மற்றும் தனியார் வங்கி குறியீடுகளும் சரிவைச் சந்தித்தன. மற்ற துறைகள் ஏற்றம் கண்டு வருகின்றன. சென்செக்ஸ் 30 பங்குகளில் 19 பங்குகள் உயர்ந்தும் 11 பங்குகள் சரிந்து வர்த்தகமாகின்றன. மறுபுறம் நிஃப்டி மிட்கேப் 100 குறியீடு 0.07 சதவீதம் உயர்ந்த நிலையில், நிஃப்டி ஸ்மால்கேப் 100 குறியீடு 1 சதவீதம் வளர்ச்சி கண்டது.அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 95.17 ஆகத் தொடங்கியுள்ளது. Stock Market: Sensex falls 192 pts to trade lower, Nifty at 22,723; IT leads sectoral loss