நான்கு உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள்!கொலீஜியம் பரிந்துரை

Wait 5 sec.

நான்கு உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள் நியமிக்க உச்ச நீதிமன்றக் கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.இந்தியத் தலைமை நீதிபதி தலைமையிலான உச்ச நீதிமன்ற கொலீஜியம், பல்வேறு உயர் நீதிமன்றங்களுக்குத் தலைமை நீதிபதிகளை நியமிக்குமாறு மத்திய அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது. நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் பி. வி. நாகரத்னா ஆகியோரையும் உள்ளடக்கிய கொலீஜியம், அக்டோபர் 26 அன்று நடைபெற்ற கூட்டத்தில், தெலங்கானா உயர் நீதிமன்ற நீதிபதி பி. சாம் கோஷியை தில்லி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப் பரிந்துரைத்தது.தற்போது குஜராத் உயர் நீதிமன்றத்தில் பணியாற்றிவரும் நீதிபதி மானஷ் ரஞ்சன் பதக், குஜராத் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். மேலும், கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி தபபிரதா சக்ரவர்த்தியை தெலங்கானா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதி சுதிர் சிங்கை, உத்தரகண்ட் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கவும் கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.தஞ்சையில் கடும் பனிமூட்டம்: வாகன ஓட்டிகள் அவதி!