நடிகர் ரஜினிகாந்த்தின் ஜெயிலர் - 2 திரைப்படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் - 2 திரைப்படம் தமிழ் மட்டுமல்லாது பான் இந்திய அளவில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. நகைச்சுவை, ஆக்ஷன் என எல்லாம் கலந்த கமர்சியல் திரைப்படமாக அமைந்ததால் அனைத்து வயது ரசிகர்களும் ரசித்து வருகின்றனர்.இப்போதும் பல திரையரங்குகளில் இப்படத்திற்கான இருக்கைகள் ஹவுஸ்புல்லாக இருப்பதுடன் சில காட்சிகளை மீண்டும் போடச் சொல்லி ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். இந்தாண்டின் மட்டுமல்லாது ரஜினியின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றாக ஜெயிலர் - 2 மாறி வருவதாகத் திரையரங்க உரிமையாளர்களும் கூறி வருகின்றனர்.இந்த நிலையில், ஜெயிலர் - 2 திரைப்படம் உலக அளவில் ரூ. 750 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், தமிழில் மட்டும் இப்படம் ரூ. 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாம். மேலும், தெலுங்கில் ரூ. 80 கோடி, கேரளத்தில் ரூ. 70 கோடி, ஹிந்தியில் ரூ. 45 கோடி என வசூலித்துள்ளதகாவும் கூறப்படுகிறது. இதனால், முதல் பாகத்தைவிட இரண்டாம் பாகம் மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளது. ஒழுக்கம், அறிவு... அப்பாவை வாழ்த்திய நடிகர் கார்த்தி!Information has emerged regarding the box office collection of actor Rajinikanth's film Jailer 2.