ஆவின் பால் பொருள்களின் விலை அதிரடி உயர்வு! நாளை முதல் அமல்!

Wait 5 sec.

தயிர், வெண்ணெய், நெய் உள்ளிட்ட 67 ஆவின் பால் பொருள்களின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நாளை (அக். 28) முதல் அமல்படுத்தப்படுகிறது.ஆவின் நிறுவனம் 175-க்கும் மேற்பட்ட வகையான பால் மற்றும் பால் பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. ஆவின் பாலகங்கள், சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் இவை விற்பனை செய்யப்படுகின்றன.சிறப்பு இனிப்புகள் தயாரிக்கப்பட்டு, நிறுவனங்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு தேவைக்கேற்ப விநியோகிக்கப்படுகின்றன. சாக்லேட், பால் ரஸ்க் ஆகியவற்றுக்கும் பொதுமக்களிடையே வரவேற்பு உள்ளது. தயிர், லஸ்ஸி, பனீர் உள்ளிட்ட முக்கியப் பொருள்களின் விற்பனை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.இந்த நிலையில், மூலப்பொருள்களின் விலை உயர்வு, கொள்முதல் செலவுகள் மற்றும் இதர செலவுகள் அதிகரித்துள்ளதால், ஆவின் பால் பொருள்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.தீபாவளி நெருங்கும் நிலையில், ஆவின் நெய், வெண்ணெய், இனிப்புப் பொருள்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது, பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.500 மி.லி. ஆவின் நெய் ரூ. 365-ல் இருந்து ரூ.400 ஆகவும் 500 மி.லி. தயிர் ரூ. 35-ல் இருந்து ரூ. 40 ஆகவும் 250 கிராம் ஆவின் மைசூர்பா ரூ.140-ல் இருந்து ரூ.160 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 250 கிராம் குலாப்ஜாமுன் ரூ. 115 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது. வெண்ணெய் முறுக்கு 200 கிராம் ரூ. 95, ஆவின் மிக்சர் 200 கிராம் ரூ. 110, மில்க் பேடா 100 கிராம் ரூ. 60, மோர் 100 மி.லி. 10 ரூபாயாகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஆனால், மக்களின் அத்தியாவசிய பொருளான ஆவின் பாலின் விலையில் எந்த மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.The prices of 67 Aavin dairy products—including curd, butter, and ghee—have been significantly increased. This price hike will come into effect starting tomorrow (Oct. 28).ஆவின் நிறுவனத்தை வலுப்படுத்தினால் மட்டுமே தனியார் பால் விலையைக் கட்டுப்படுத்த முடியும்! அன்புமணி