முதல்வர் விஜய், ஒரு ஃபைலை திறந்ததற்கே ஒரு முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளதாக சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.திமுக ஆட்சிக் காலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி, சிஎம்டிஏ அனுமதிகள் மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாககூறி, ரூ.100 கோடிக்கு மேல் சட்டவிரோதமாக வசூலித்ததாக தனியார் பள்ளிகள் சங்கம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமாருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தனர்.இந்த வழக்கு தொடர்பாக அன்பில் மகேஸை திங்கள்கிழமையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து, அவரிடம் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது. இதனிடையே, புலன் விசாரணை ஆரம்ப நிலையில் உள்ளதாலும், புதிய தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளதாலும் அன்பில் மகேஸுக்கு முன்பிணை வழங்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியது.திங்கள்கிழமை நள்ளிரவு வரை நடைபெற்ற விசாரணையில், நவ. 6 வரை அவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில், இதையடுத்து புழல் சிறையில் அன்பில் மகேஸ் அடைக்கப்பட்டார்.இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் செவ்வாய்க்கிழமை (அக். 27) காலை செய்தியாளர்களைச் சந்தித்தார்.இதுபற்றி அவர் பேசுகையில், “பார்ட்டி ஃபன்ட், பார்ட்டி ஃபன்ட் என்றும், நாங்கள் எங்கே வாங்கினோம் என்று திமுகவினர் பேசிக்கொண்டிருந்தனர். முதல்வர் விஜய் மூன்று கோப்புகளை எப்போது திறப்பார் என்று கேட்டுக்கொண்டிருந்தனர். ஒரு ஃபைலை திறந்ததற்கே முன்னாள் அமைச்சர் (அன்பில் மகேஷ்) ரூ. 400 கோடி லஞ்சம் பெற்ற புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது திமுகவுக்கு மிகப்பெரிய அவமானம். திமுக, கை வைக்காத இடமே கிடையாது. பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்புக்கான வழங்கப்பட்ட சான்றிதழிலேயே ஊழல் செய்திருக்கிறீர்கள். பள்ளிக்கல்வித்துறையிலிருந்து மிரட்டி பள்ளிகளிடமிருந்து பணம் பறித்திருக்கிறார்கள். பள்ளிக்கல்வித்துறையில் மட்டும் ஓராண்டில் சுமார் ரூ. 400 கோடி அளவுக்கு லஞ்சம் என்றால் மற்ற துறைகளைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள்.எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் முதல்வர் விஜய்யிடம் சவால் விட்டார்கள். முதல்வர் விஜய்யிடம் இன்னும் பல கோப்புகள் விசாரணையில் இருக்கின்றனர். நடவடிக்கைகள் தொடரும்” எனத் தெரிவித்தார். Law Minister Nirmalkumar has stated that a former minister has been arrested for merely opening a file.