சென்னை புறநகர் ரயில்களின் நேரம் மாற்றம்! காத்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி!!

Wait 5 sec.

திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட சென்னை புறநகர் பகுதிகளுக்கு இயக்கப்படும் ரயில்கள், நவம்பர் 1ஆம் தேதி முதல் புதிய அட்டவணைப்படி இயக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.புதிய ரயில் நேர அட்டவணையில் பல ரயில்கள் நீட்டிக்கப்பட்டிருப்பதால், பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியாகவும் மாறியிருக்கிறது.அதுபோல, ஞாயிற்றுக் கிழமைகளுக்கும் புதிய ரயில் அட்டவணை வெளியிடப்பட்டுளள்து. புதிய ரயில் அட்டவணைப்படி, நவம்பர் 1ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படியும், நவம்பர் 2ஆம் தேதி முதல் வார நாள்களுக்கான புதிய அட்டவணைப்படியும் ரயில்கள் இயக்கப்படவிருக்கின்றன.புறநகர் ரயில் சேவைக்கான புதிய அட்டவணை!திருவள்ளூர் - சென்னை சென்டிரல் வரை புதிய மின்சார ரயில் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.திருவள்ளூரிலிருந்து மதியம் 12.25 மணிக்குப் புறப்படும் மின்சார ரயில் சென்னை சென்டிரலை மதியம் 1.45 மணிக்கு வந்தடையும்.சென்னை சென்டிரலிலிருந்து பட்டபிராம் வரை இயக்கப்பட்ட ரயில் திருவள்ளூர் வரை நீட்டிக்கப்படுகிறது.அதாவது காலை 7.10க்கு சென்டிரலில் இருந்து பட்டாபிராம் புறப்படும் ரயில், காலை 8.30க்கு திருவள்ளூர் வந்தடையும்.திருவள்ளூர் வரை இயக்கப்பட்ட ரயில் நவம்பர் முதல் கடம்பத்தூர் வரை இயக்கப்படும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு 7.30க்கு புறப்படும் ரயில் அரக்கோணம் வரை அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.சென்னை சென்டிரலில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை இயக்கப்பட்ட மின்சார ரயில் நவம்பர் முதல் சூலூர்பேட்டை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை - பரங்கிமலை இடையேயான ரயில் சேவையில் மாற்றமில்லை.