விசாகப்பட்டினம் துறைமுகத்தில் வெல்டிங் பணியின் போது தீ விபத்து!

Wait 5 sec.

விசாகப்பட்டினம் துறைமுகத்தில் வெல்டிங் பணியின் போது தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் துறைமுகத்தில் வெள்ளிக்கிழமை கட்டுமானத்தில் இருந்த கன்வேயர் பெல்ட் அமைப்பில் வெல்டிங் பணியின் போது சிறிய தீ விபத்து ஏற்பட்டது. எனினும், அது உடனடியாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகக் காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்."வெல்டிங் பணி நடந்து கொண்டிருந்த போது சிறிய தீ விபத்து ஏற்பட்டது. தீப் பொறிகள் கன்வேயர் பெல்ட் அமைப்பின் சந்திப்பு அருகே இருந்த பிளாஸ்டிக் உறை மீது விழுந்ததால் தீப்பற்றியது. அது உடனடியாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது, பெரிய அளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை," என்று அந்த அதிகாரி பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.கன்வேயர் பெல்ட் இன்னும் பொருத்தப்படவில்லை என்றும், அது பயன்பாட்டுக்கு வரவில்லை என்றும் அந்த அதிகாரி தெளிவுபடுத்தினார். அதன் தாங்கு அமைப்பு மட்டுமே கட்டுமானத்தில் இருந்ததாக அந்த அதிகாரி மேலும் கூறினார். இதனால் துறைமுகத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. A minor fire broke out during welding work on an under-construction conveyor belt structure at Visakhapatnam Port on Friday and was immediately brought under control, a police official said.ஓபிஎஸ்ஸைச் சந்தித்து நலம் விசாரித்தார் உதயநிதி!