"சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று(அக்.30) வறண்ட வானிலையே நிலவக்கூடும்"

Wait 5 sec.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று(அக்.30) வறண்ட வானிலையே நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நேற்று (29-10-26) தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (30-10-26) காலை 0830 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் நிகோபார் தீவுகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (Depression) 31 ம் தேதி வாக்கில் வலுப்பெறக்கூடும். அதன் பிறகு, அடுத்த 2 நாட்களில் இது மேற்கு-வடமேற்கு திசையில் ஆந்திரப் பிரதேச கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.இதன் காரணமாக இன்று(வெள்ளிக்கிழமை) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தெற்கு கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.அக்.31: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:இன்று (அக்.30): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.நாளை (அக்.31): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. The Chennai Meteorological Centre has stated that dry weather is likely to prevail in Chennai and its suburbs today (Oct. 30).குமரியில் சற்று தணிந்த மழை: திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதிவங்கக் கடலில் புதிய புயல்! நவம்பர் முதல் வாரம் எப்படி இருக்கும்? தீபாவளிக்கு மழையா?