தீபாவளி திருநாள்! ரூ.200-க்கு 10 மளிகைப் பொருள் தொகுப்பு! இன்று முதல் விற்பனை

Wait 5 sec.

கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் ரூ. 200-க்கு10 வகையான சிறப்பு மளிகைத் தொகுப்பு இன்று (அக். 30) விற்பனை செய்யப்படவுள்ளது.தமிழ்நாட்டில் அரிசி விலை, மளிகைப் பொருள்களின் விலை உயர்வு மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. பண்டிகை காலத்தில் கட்டுக்கடங்காத விலை உயர்வால் தவெக அரசை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.இந்த நிலையில், தமிழ்நாட்டில் வழக்கமாக பொங்கல் பண்டிகையின்போது வழங்கப்படும் பரிசுத் தொகுப்பை போன்று, இந்தாண்டு தீபாவளிக்கும் தமிழக அரசு வழங்கவுள்ளது.இதன்படி, 10 மளிகைப் பொருள்கள் அடங்கிய ஒருங்கிணைந்த “சிறப்பு மளிகைத் தொகுப்பு”, ஒரு தொகுப்பு ரூ. 200 என்ற விலையில், மாநகராட்சிகள் அல்லாத பகுதிகளில் செயல்படும் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலைகள், தொடக்கக் கூட்டுறவுப் பண்டகசாலைகள் மற்றும் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களின் 128 விற்பனை நிலையங்கள் மூலம் நுகர்வோருக்கு விற்பனை செய்ய கூட்டுறவுத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த மளிகைத் தொகுப்பில் கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, உளுந்தம் பருப்பு, மிளகாய், தனியா, பூண்டு, புளி, கடுகு, சீரகம், சோம்பு என 1.4 கிலோ எடையுள்ள பொருள்கள் இருக்கும்.தமிழ்நாட்டில் கிட்டத்திட்ட 2.29 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் உள்ள நிலையில், அவர்களுக்கு ரூ. 200 மதிப்பிலான மளிகைப் பொருள் தொகுப்பு வழங்கப்பட்டால் அரசுக்கு ரூ. 458 கோடி செலவாகும்.இதேபோல், புதுச்சேரியில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரூ. 700 மதிப்பிலான மளிகைப் பொருள்கள் வழங்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.வங்கக் கடலில் புயல் சின்னம் உருவானது: இன்று வலுவடைய வாய்ப்புDiwali: A bundle of 10 grocery items for Rs. 200 goes on sale starting today