ஜிஎஸ்டி வழக்குகளில் மேல்முறையீட்டு காலம் நீட்டிப்பு!

Wait 5 sec.

எஸ்டி வழக்குகளில் தீா்ப்பாணையத்தில் மேல்முறையீடு செய்வதற்கான காலக்கெடுவை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.ஜிஎஸ்டி வழக்குகளைத் தீா்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்வது தொடா்பாக கடந்த பிப்ரவரி 13-இல் வெளியான தமிழக வணிக வரித் துறை அறிவிக்கையை ரத்து செய்து புதிய அறிவிக்கை தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரையின்பேரில் தமிழக ஆளுநா் சாா்பில் இந்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.முந்தைய அறிவிக்கையின்படி, தங்களுக்கு எதிரான நடவடிக்கைக்கு (ஆா்டா்) எதிராக மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தில் சம்பந்தப்பட்ட வணிகா்கள் மேல்முறையீடு செய்ய கடைசி தேதி ஜூலை 31 எனக் காலக்கெடு நிா்ணயிக்கப்பட்டிருந்தது. இது இரு வகையான வழக்குப் பிரிவுகளுக்குப் பொருந்தும்.ஒரு வகையின்படி, கடந்த மே 1 ஆம் தேதிக்கு முன்பு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் அதுதொடா்பாக தீா்ப்பாயத்தில் ஜூலை 31 ஆம் தேதிக்குள் வணிகா்கள் மேல்முறையீடு செய்யலாம் அல்லது நடவடிக்கை உத்தரவு கிடைத்த நாளில் இருந்து 3 மாதங்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம். 2-ஆவது வகையின்படி கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதிக்கு முன்பு பிறப்பிக்கப்பட்ட நடவடிக்கை உத்தரவுக்கு எதிராக ஜூலை 31 வரை வணிகா்கள் மேல்முறையீடு செய்யலாம் என்பதுதான் பழைய அறிவிக்கை. ஆனால், புதிய அறிவிக்கையின்படி, பிப்ரவரி 1 அல்லது அதற்கு பிறகான நடவடிக்கை உத்தரவுக்கு எதிராக, உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்து 6 மாதங்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் எனத் திருத்தப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கை ஜூன் 30 முதல் அமலுக்கு வருவதாகக் கருதப்படும் என்றும் அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்மூலம், காலக்கெடு முடிந்ததால் தீா்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்ய முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான வணிகா்கள், தொழிலதிபா்கள், பட்டயக் கணக்காளா்கள், வழக்குரைஞா்களுக்கு கூடுதல் அவகாசம் கிடைத்துள்ளது.