சென்னை: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2,538 பணியிடங்களுக்கு ஊழியர்களை நியமித்ததில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட 8 பேர் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.இது தொடர்பாக அமலாக்கத்துறை இயக்குநரகம் அளித்த புகாரின் அடிப்படையில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை தலைமையகத்தில் குற்ற எண் 02/2026-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் பல்வேறு பிரிவுகளில் உதவிப் பொறியாளர், இளநிலைப் பொறியாளர், சுகாதார ஆய்வாளர், வரைவாளர் உள்ளிட்ட மொத்தம் 2,538 பணியிடங்களுக்கு ஆள்களைத் தேர்வு செய்து நியமித்ததில் ஊழல் மற்றும் முறைகேடுகள் நடைபெற்றதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், தகுதியற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து பெருமளவில் பணம் வசூலிக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அவர்கள் பணியமர்த்தப்பட்டதாகவும், இந்தப் பணப் பரிவர்த்தனைகள் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் ஹவாலா வழியாக மேற்கொள்ளப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.இந்த வழக்கின் விசாரணையின் ஒரு பகுதியாக, வியாழக்கிழமை சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், நாமக்கல், திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் கே.என். நேரு தொடர்புடைய மொத்தம் 25 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.இந்தச் சோதனையின்போது, வழக்கு விசாரணைக்குத் தொடர்புடைய 170 ஆவணங்கள் மற்றும் 13 மின்னணு ஆவணங்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.இந்த ஆவணங்கள் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.Anti-Corruption Department registers case against 8 individuals, including former DMK minister K.N. Nehruமுல்லைப் பெரியாறு அணையில் நில அதிா்வு ஆய்வு: ரூ.43 லட்சத்தை ஒதுக்கியது தமிழக அரசு