அதிரடியாகக் குறைந்த தங்கம் விலை! இன்றைய நிலவரம் (அக். 30)

Wait 5 sec.

சென்னையில் தங்கம் விலை இன்று (அக். 30) அதிரடியாக சவரனுக்கு ரூ. 1,240 குறைந்துள்ளது. தங்கம் விலை கடந்த வாரம் குறைந்து வந்த நிலையில் இந்த வாரத்தில் கடந்த சில நாள்களாக உயர்ந்து வந்தது.இந்த வாரத் தொடக்க நாளான திங்கள்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 120 உயர்ந்த நிலையில் செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 400 புதன்கிழமை சவரனுக்கு ரூ. 480 என உயர்ந்தது. நேற்று (வியாழக்கிழமை) தங்கம் விலை மாற்றமின்றி விற்பனையானது.தொடர்ந்து இன்று தங்கம் விலை அதிரடியாகக் குறைந்துள்ளது. இன்றைய தங்கம் விலைசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக். 30, வெள்ளிக்கிழமை) சவரனுக்கு ரூ. 1,240 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,04,320 -க்கும் கிராமுக்கு ரூ. 155 குறைந்து ஒரு கிராம் ரூ. 13,040 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.இன்றைய வெள்ளி விலைவெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ. 5 குறைந்து ரூ. 210 -க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 10,000 குறைந்து ரூ. 2.10 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. Today Gold and silver price in Chennai, Tamilnadu