சென்னை நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு முதல்வர் ஜோசப் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.விடுதலை போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-ஆவது பிறந்தநாள் விழா மற்றும் 64-ஆவது குருபூஜை இன்று அனுசரிக்கப்படுகிறது.இந்த நிலையில், சென்னை நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு முதல்வர் ஜோசப் விஜய் மாலை அணிவித்து, மலர் தூவி இன்று காலை மரியாதை செலுத்தினார்.இந்த நிகழ்வில், சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், அமைச்சர்கள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, மரிய வில்சன், ராஜ்மோகன், விஜய் தமிழன் பார்த்திபன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்துக்கு முதல்வர் விஜய் நேரில் சென்று மரியாதை செலுத்த திட்டமிடப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.இதனிடையே, உளவுத்துறை எச்சரிக்கை காரணமாக பாதுகாப்பு கருதி முதல்வர் விஜய்யின் பயணம் ரத்து செய்யப்பட்டது.தமிழ்நாடு அரசுத் தரப்பில் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் அமைச்சர்கள் நிர்மல் குமார், ராஜீவ், மதன்ராஜா உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.Chief Minister Vijay pays tribute to the statue of Muthuramalinga Thevar in Chennai!முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை