அடுத்த வாரம் தீபாவளிப் பண்டிகை வரவிருக்கிறது. பலரும் தீபாவளிக்கு ஊருக்குப் போக தயாராகிக் கொண்டிருப்பார்கள். சிலரோ, வீட்டில் என்ன பலகாரம் செய்து அசத்தலாம் என்று சிந்தித்துக் கொண்டிருப்பார்கள்.இதில், முதல் பிரிவினருக்கு சிறப்பு ரயில்கள், பேருந்துகள் பற்றிய செய்திகள் நாள்தோறும் வெளியாகிக் கொண்டுதானிருக்கிறது. இரண்டாவது ரகத்தினருக்கு உதவுவதே நமது நோக்கம். விதவிதமாக முறுக்கு வகைகள் செய்வது எப்படி என்று தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு பல முறுக்கு வகைகளை தொகுத்து வழங்கியிருக்கிறோம்.நமது அம்மா, பாட்டி போல செய்ய முடியாது என்றாலும் நம்மால் முடிந்த அளவுக்கு முறுக்கு சுட்டு வீட்டினரை அசத்தலாம். அல்லது வீட்டில் தொல்லைக் கொடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு துயரத்தையாவது கொடுத்த திருப்தியை பெறலாம். இரண்டில் எது நடந்தாலும் குமுதா ஹாப்பிதானே.எனவே, வாருங்கள் விதவிதமாக முறுக்கு சுடுவது எப்படி என்று பார்க்கலாம்.பொட்டுக்கடலை முறுக்குபொட்டுக் கடலை மாவு, அரிசி மாவு சேர்த்து செய்யும் இந்த பொட்டுக் கடலை முறுக்கு செய்வதற்கு மிகவும் எளிதானது. பெரிய அளவில் சொதப்பாது. ருசியும் வழக்கமான முறுக்கு போலவே இருக்கும்.பொட்டுக் கடலை முறுக்கு செய்வது எப்படி?ரிப்பன் பக்கோடாகடைகளில் செய்வதைப் போல ருசியாக ரிப்பன் பக்கோடா செய்து பார்க்க ஆசையா.. கவலையே வேண்டாம். மிக எளிதாக செய்யலாம்.ரிப்பன் பக்கோடா செய்வது எப்படி?முள்ளு தேன் குழல் முறுக்குபலருக்கும் பிடித்தமான முள்ளு தேன் குழல் முறுக்கு செய்வது மிகவும் எளிதுதான். ஒரு முறை செய்து பார்த்தால், அடுத்த முறை அதன் பக்குவம் புரிந்துவிடும்.முள்ளு தேன் குழல் முறுக்கு செய்வது எப்படி?தேங்காய்ப்பால் முறுக்குஇதுவும் மற்ற முறுக்குகளைப் போலவே செய்வது எளிதுதான், ஆனால், தேங்காய்ப்பால் சேர்த்து செய்வதால் ருசி தனியாக இருக்கும். எங்கே வாங்கினீர்கள் என்று விலாசம் கேட்பார்கள் சாப்பிடுபவர்கள்.தேங்காய்ப்பால் முறுக்கு செய்முறை