கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் உருவாகிவரும் சத்ரபதி சிவாஜி படம் இரண்டு பாகங்களாக வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னட நடிகராக சிறிய படங்களில் நடித்து வந்த ரிஷப் ஷெட்டி காந்தாரா திரைப்படத்திற்குப் பின் மிகப்பெரிய நட்சத்திர நடிகராக உருவெடுத்துள்ளார். அப்படத்தின் வணிகம் இந்தியா முழுவதும் அவரை பிரபலப்படுத்தியது.சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கைக் கதையாக உருவாகும் ’சத்ரபதி சிவாஜி மகாராஜ்’ படத்தில் சிவாஜியாக ரிஷப் ஷெட்டி நடிக்க உள்ளதை கடந்த டிச.2024ல் அறிவித்தனர்.சந்தீப் சிங் இயக்கும் இப்படத்தின் முதல் அறிவிப்பு போஸ்டரும் வெளியாகி கவனம் பெற்றது. உலகளவில் இந்தப் படம் வரும் ஜனவரியில் அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காந்தாரா படத்திற்குப் பின் மிகப்பெரிய பட்ஜெட் படங்களில் ரிஷப் ஷெட்டி ஒப்பந்தமாகி வருவது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.டி சீரிஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பாகம் ஜனவரியில் வெளியாகவிருக்கிறது.இந்த நிலையில், சிவாஜியின் உருவப் படத்தை தயாரிப்பாளர் நடிகர் ரிஷப் ஷெட்டியிடம் அளித்து இரண்டு பாகமாக வெளியாகும் என்பதையும் அறிவித்துள்ளார். Swarajya was not just a dream, it was a vision that shaped history. It is our honour and privilege to be part of a cinematic tribute to the extraordinary legacy of Chhatrapati Shivaji Maharaj. T-Series collaborates with @shetty_rishab and @thisissandeeps for The Pride of… pic.twitter.com/zqxIpWW4YZ— T-Series (@TSeries) October 30, 2026மக்களைத் தனிமைப்படுத்தும் டிஜிட்டல் உலகம்: இம்தியாஸ் அலிRishab Shetty’s Chhatrapati Shivaji Maharaj Epic ‘The Pride of Bharat’ Lands T-Series, Set as Two-Part Saga