இடைத்தேர்தலில் சீமானுக்கு ஆதரவா? மு.க. ஸ்டாலின் பதில்!

Wait 5 sec.

இடைத்தேர்தலில் சீமானுக்கு ஆதரவா? என்ற கேள்விக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பதிலளித்துள்ளார். அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். அதேபோல இந்த இடைத்தேர்தலில் மற்ற கட்சிகள் ஆதரவளித்தால் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் கூறியிருந்தார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜையையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது செய்தியாளர்களுடன் பேசிய ஸ்டாலின், இடைத்தேர்தல் குறித்த கேள்விக்கு பதிலளித்தார். இடைத்தேர்தலில் சீமானுக்கு ஆதரவா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "முதலில் தேர்தல் தேதி அறிவிக்கட்டும். அதன்பிறகு அதுபற்றி முடிவெடுப்போம்" என்று பதிலளித்துள்ளார் . தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு சமீபத்தில் இடைத்தேர்தல் நடந்து முடிந்த நிலையில் மீதியுள்ள திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் ஆகிய தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Is M.K. Stalin Support for Seeman in the by-electionபசும்பொன் தேவர் நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை!