தேவர் திருமகனாரின் அரும்பணிகளைப் போற்றுவோம் என திமுக துணைப் பொதுச் செயலாளரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி தெரிவித்துள்ளார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119 ஆவது ஜெயந்தி விழா மற்றும் 64 ஆவது குருபூஜை விழாவையொட்டி, திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி தனது 'எக்ஸ்' பக்க பதிவில் தெரிவித்திருப்பதாவது: நேதாஜியுடன் இணைந்து ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராகக் களம் கண்ட விடுதலைப் போராட்ட வீரர் பசும்பொன் திருமகனாரின் பிறந்தநாளில், அவரது தியாகத்தை நினைவுகூர்வோம்.காலனிய ஆட்சியால் உரிமைகள் பறிக்கப்பட்ட சமூகங்களின் விடுதலைக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் அவர் ஆற்றிய அரும்பணிகளைப் போற்றுவோம்! என அவர் கூறியுள்ளார்.Let us honor the invaluable contributions of Thevar Thirumaganarமு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த அதிமுக நிா்வாகிகள்