பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் நேரில் மரியாதை செலுத்தினார்.விடுதலை போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-ஆவது பிறந்தநாள் விழா மற்றும் 64-ஆவது குருபூஜை இன்று அனுசரிக்கப்படுகிறது.இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இதற்காக தில்லியிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்த சி.பி. ராதாகிருஷ்ணன், அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டா் மூலம் பசும்பொன் வந்தடைந்தார்.முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த சி.பி. ராதாகிருஷ்ணன்,“நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் மனதில் இடம்பிடித்தது மட்டுமின்றி, அவரைத் தலைவராக ஏற்றுக் கொண்டு நாட்டின் விடுதலைக்காக வாழ்நாள் முழுவதும் உழைத்தவர். தனது கொள்கையில் சிறிது சமரசம் செய்து கொண்டிருந்தாலும் தமிழ்நாட்டின் முதல்வராக முத்துராமலிங்கத் தேவர் அமர்ந்திருப்பார்.தனது கொள்கைக்கு எதிராக எவ்வித சமரசமும் செய்துகொள்ளாதவர். தனது வாழ்நாள் முழுவதும் நேர்மை, கண்ணியத்துடன் வாழ்ந்தவர். தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தவர். மீனாட்சியம்மன் கோவிலில் தாழ்த்தப்பட்ட மக்களை அனுமதிக்க தொடர் போராட்டம் நடத்தி வெற்றி கண்டவர். மகத்தான தேசிய தலைவர் முத்துராமலிங்கத் தேவர்” எனத் தெரிவித்தார்.குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனின் வருகையை ஒட்டி, மதுரை, பசும்பொன் கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று மாலை வரை ட்ரோன் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.Vice President pays tribute at the memorial of Muthuramalinga Thevar!சென்னையில் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு முதல்வர் விஜய் மரியாதை!