ஆயில் இந்தியா நிறுவனத்தின் நிர்வாகப் பிரிவில் காலியாக உள்ள கிரேடு 'ஏ, பி' மற்றும் சி' நிலை பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் வரும் நவ.14 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இது குறித்து பார்ப்போம்...வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: HRAQ/REC-EX-B/2026-03பணி: Superintending Research Scientistகாலியிடங்கள்: 5தகுதி: வேதியியல், புவியியல் பிரிவில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பொறியியல் துறையில் கெமிக்கல், பெட்ரோலியம் பிரிவில் முனைவர் பட்டம் பெற்றிருப்பதுடன் நான்கு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.சம்பளம்: மாதம் ரூ.80,000 - 2,20,000வயதுவரம்பு: 37-க்குள் இருக்க வேண்டும். பணி: Senior Officer(Mechanical)காலியிடங்கள்: 14தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் 65 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.60,000 - 1,80,000வயதுவரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும். பணி: Senior Officer(Petroleum)காலியிடங்கள்: 4தகுதி: பொறியியல் துறையில் பெட்ரோலியம் பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.60,000 - 1,80,000வயதுவரம்பு: 29-க்குள் இருக்க வேண்டும். பணி: Senior Accounts Officer/Senior Internal Auditorகாலியிடங்கள்: 6தகுதி: ICAI, ICMAI அமைப்பில் Associate Member-ஆக இருக்க வேண்டும்.சம்பளம்: மாதம் ரூ.60,000 - 1,80,000வயதுவரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும். பணி: Hindi Officer(Official Language)காலியிடங்கள்: 2தகுதி: ஹிந்தி பாடத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.சம்பளம்: மாதம் ரூ.50,000 - 1,60,000வயதுவரம்பு: 37-க்குள் இருக்க வேண்டும். பணி: Confidential Secretaryகாலியிடங்கள்: 1(PWD)தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் Secretarial Practice-ல் இரண்டு ஆண்டு டிப்ளமோ தேர்ச்சியுடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.சம்பளம்: மாதம் ரூ.60,000 - 1,80,000வயதுவரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினர்களுக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். இதர பிரிவினர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் முறை: www.oil-india.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 14.11.2026விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.Oil India Limited, a Maharatna Public Sector Undertaking invites applications from Indian Nationals to fill up the following posts in Grade A, B, Cமத்திய பொதுத்துறை நிறுவனத்தில் டிரேட்ஸ்மேன் வேலை: விண்ணப்பிப்பது எப்படி..?