உத்தரகண்ட் மாநிலத்தில் பத்ரிநாத்திலிருந்து பக்தர்களுடன் புறப்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி வெடித்துச் சிதறியது. இதில் பயணித்த விமானி உள்பட 6 பேர் பலியாகினர்.பத்ரிநாத்திலிருந்து 5 பக்தர்களுடன் வெள்ளிக்கிழமை பிற்பகல் புறப்பட்ட டிரான்ஸ் பாரத் ஏவியேஷன் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது.மோசமான வானிலை காரணமாக கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் ஜோஷிமத் அருகே மலைச்சரிவில் மோதி விபத்துக்குள்ளானதாக முதல்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது.பத்ரிநாத் மற்றும் ஜோஷிமத் இடையே உள்ள விஷ்ணுபிரயாக் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை வீரர்கள் அடங்கிய மீட்புக் குழுவினர் அப்பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.ஹெலிகாப்டர் விழுந்த பகுதியில் கனமழை பெய்து வரும் நிலையில், மீட்புப் பணிகளுக்கு இரண்டு ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்திய ராணுவத்திடம் உதவி கேட்கப்பட்டுள்ளது.இந்த விபத்தை உறுதி செய்துள்ள உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான துரதிர்ஷ்டவசமான செய்தி கிடைத்துள்ளது, நிலைமையை கண்காணித்து வருகிறேன். பயணிகள் பாதுகாப்பாகத் திரும்பி வர இறைவனிடம் வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.Helicopter returning from Badrinath meets with an accident!காங்கிரஸ் உருவாக்கிய வங்கிகளை மோடி விற்கிறார்! ராகுல் காந்தி