டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு... அரசுப் பணி நியமன வயது உச்ச வரம்பு 5 ஆண்டுகள் உயர்வு!

Wait 5 sec.

போட்டித் தேர்வர்களின் கோரிக்கைகளை ஏற்று, அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்சவரம்பை உயர்த்தி முதல்வர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுபற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: போட்டித் தேர்வர்களின் கோரிக்கைகளை ஏற்று, அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்சவரம்பை தற்போதைய விதிகளில் உள்ளதைவிட 5 ஆண்டுகள் உயர்த்தி தமிழ்நாடு முதல்வர் ச. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.மேற்கண்ட வயது வரம்பு உயர்வானது, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு (BC. BC(M), MBC & DNC, SC, ST) ஆதரவற்ற விதவைகள்) ஏற்கனவே உள்ள வயதுச் சலுகையோடு கூடுதலாக அமையும்.உயர்த்தப்படும் வயது உச்சவரம்பு - குரூப் 1 தேர்வுக்கு... பொதுப்பிரிவினருக்கு 32ல் இருந்து 37 வயதாக உயர்த்தப்படுகிறது. இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 37ல் இருந்து 42 ஆக உயர்த்தப்படுகிறது. இதுவே மாற்றுத்திறனாளிகளில், பொதுப்பிரிவினருக்கு 42ல் இருந்து 47 ஆகவும் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 47ல் இருந்து 52 ஆகவும் உயர்த்தப்படுகிறது. குரூப் 2 & குரூப் 2ஏ தேர்வுக்கு... பொதுப்பிரிவினருக்கு 30ல் இருந்து 35 வயதாகவும் ஒதுக்கீட்டு பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளில் பொதுப்பிரிவினருக்கு 40ல் இருந்து 45 ஆக உயர்த்தப்படுகிறது. ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல குரூப் 4 தேர்வுக்கும் 3 பிரிவுகளில் தனித்தனியாக வயது உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. குரூப் 4 தேர்வு - அதிக கல்வி தகுதி உடையோருக்கு... பொதுப்பிரிவினருக்கு 30ல் இருந்து 35 வயதாக உயர்த்தப்படுகிறது. மற்ற பிரிவினருக்கு வயது உச்ச வரம்பு இல்லை. குரூப் 4 தேர்வு - அதிக கல்வி தகுதி இல்லாதோருக்கு... (BC, BCM, MBC, DNC) பொதுப்பிரிவினருக்கு 30ல் இருந்து 35 ஆகவும் ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 32ல் இருந்து 37 ஆகவும் மாற்றுத்திறனாளிகளில், பொதுப்பிரிவினருக்கு 40ல் இருந்து 45 ஆகவும் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 42ல் இருந்து 47 ஆகவும் உயர்த்தப்படுகிறது. குரூப் 4 தேர்வு - எஸ்சி, எஸ்டி மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு... பொதுப்பிரிவினருக்கு 30ல் இருந்து 35 ஆகவும் ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 35ல் இருந்து 40 ஆகவும்மாற்றுத்திறனாளிகளில், பொதுப்பிரிவினருக்கு 40ல் இருந்து 45 ஆகவும் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 42ல் இருந்து 50 ஆகவும் உயர்த்தப்படுகிறது.இந்த வயது உச்சவரம்பு உயர்வு இன்று (30.10.2026) முதல் ஐந்து ஆண்டுகள் வரை நடைமுறையில் இருக்கும் என்றும் இந்த உத்தரவு மூலம் வயது வரம்பு முடிவடையும் நிலையில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான தமிழ்நாட்டைச் சேர்ந்த போட்டித் தேர்வர்கள் மற்றும் இளைஞர்கள் பெருமளவில் பயனடைவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Govt job appointment: Upper Age Limit Raised by 5 Years: CM Vijay Issues Order