ஸ்பெயின் நாட்டின் கால்பந்து வீராங்கனையும் பார்சிலோனா க்ளப்பிற்காக விளையாடியவருமான அலெக்ஸியா புட்டெல்லாஸ் மூன்றாவது முறையாக பேலந்தோர் விருது வென்று சாதனை படைத்துள்ளார். ஆடவர் பிரிவில் இங்கிலாந்தின் ஹாரி கேன் இந்த விருதை முதன்முதலாக வென்றுள்ளார். மெஸ்ஸிக்கு கிடைக்குமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஹாரி கேன் தட்டிச்சென்றார். கால்பந்து உலகில் பேலந்தோர் விருதுக்கென்று தனியான மரியாதை இருக்கிறது. இந்த விருது ஒவ்வொரு ஆண்டும் பிரான்ஸின் நிறுவனம் அளிக்கிறது. ஸ்பெயின் கால்பந்து வீராங்கனை 32 வயதான அலெக்ஸியா புட்டெல்லாஸ் கடந்த சீசனில் அதிகமாக கோப்பைகளை வென்றுள்ளார். மகளிர் சாம்பியன்ஸ் லீக்கையும் அவரது பார்சிலோனா அணி வென்றது குறிப்பிடத்தக்கது. அலெக்ஸியா புட்டெல்லாஸ் மகளிர் நேஷனல் லீக்கில் ஸ்பெயினை வெல்லவும் உதவினார். தற்போது, மகளிர் பீரிமியர் லீக்கில் லண்டன் சிட்டி லயனசஸ் அணியில் இணைந்துள்ளார்.முன்னதாக, பார்சிலோனாவின் மிட்ஃபீல்டர் அய்டானா பொன்மட்டி ஹாட்ரிக் பேலந்தோர் விருதை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனையை அலெக்ஸியா புட்டெல்லாஸ் சமன்செய்துள்ளார். கடந்த 2021, 2022 சீசன்களில் வென்ற இவர் ஏசிஎல் தசைக்கிழிவினால் 2023,24 வரை அவரது ஆட்டம் பாதிக்கப்பட்டது. இந்த இடைவெளியில் அய்டானா பொன்மட்டி 2023, 2024, 2025 சீசன்களில் ஹாட்ரிக் பேலந்தோர் விருதை வென்று அசத்தினார். அவருக்கு கடந்த டிசம்பரில் கால் உடைந்ததால் அவரது இடத்தை அலெக்ஸியா புட்டெல்லாஸ் சமன்செய்துள்ளதும் நினைவுகூரத்தக்கது.Alexia & Harry! #ballondor pic.twitter.com/HgBCCjMlac— Ballon d'Or (@ballondor) October 26, 2026பேலந்தோர் விருதை வென்ற ஹாரி கேன்..! கால் நூற்றாண்டுக்குப் பிறகு முதல் இங்கிலாந்து வீரர்!Spain, barcelona star Alexia Putellas hat trick of Ballon d'Or