பாலிவுட் நடிகர் இம்ரான் கான் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.பாலிவுட் நடிகர் இம்ரான் கான் அமெரிக்க குடியுரிமை கொண்டவர். ஆனால், அவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதால் இந்தியாவில் வாழ்வதற்கும், வேலை செய்வதற்குமான இந்திய வெளிநாட்டு குடிமகன் எனப்படும் ஓசிஐ அட்டையையும் அவர் வைத்துள்ளார்.கடந்த அக்டோபர் 10 அன்று, தில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக சிஜேபி நடத்திய போராட்டத்திற்கு ஆதரவாக மும்பையில் போராட்டம் நடைபெற்றது. அதில், நடிகர் இம்ரான் கான் கலந்துகொண்டார். இந்த நிலையில், அமெரிக்க குடியுரிமை கொண்டவரான இம்ரான் கான் இந்தியாவில் அரசியல் சார்ந்த போராட்டங்களில் பங்கேற்பது சட்டப்படி தவறு என்றும் விதிகளுக்குப் புறம்பானது என்றும் மும்பை பாஜக தலைவட் கிரிட் சோமையா காவல்துறையில் புகார் அளித்தார்.இதனைத் தொடர்ந்து, காவல்துறையில் அளிக்கப்பட்ட புகார் ’வெளிநாட்டவர் மண்டலப் பதிவு அலுவலகத்திற்கு’ அனுப்பப்பட்டது. அங்கிருந்து, குடியேற்றம் மற்றும் வெளிநாட்டவர் சட்டம், 2025 பிரிவு 7-ன் கீழ் இம்ரான் கானுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸில் அவர் அக். 28-க்குள் இந்தியாவை விட்டு வெளியேறவேண்டும் எனக் கெடு விதிக்கப்பட்டது.அந்த நோட்டீஸை எதிர்த்து இம்ரான் கான் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், போராட்டத்தை தான் ஒருங்கிணைக்கவில்லை என்றும் போராட்டத்தில் நேரடியாகப் பங்கேற்காமல் அங்கு என்ன நடக்கிறது என்பதைக் காண மட்டுமே சென்றதாகவும் அவர் கூறினார். மேலும், தனது தரப்பின் நியாயத்தைக் கேட்காமல் உடனடியாக நாடுகடத்த உத்தரவிட்டது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றும் அவரது வாதத்தில் குறிப்பிடப்பட்டது.மும்பை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில், மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள், அடுத்த விசாரணை நடைபெறும் நவ. 2 வரை இம்ரான் கான் மீது கட்டாய நடவடிக்கை அல்லது நாட்டை விட்டு வெளியேற்றும் நடவடிக்கை எடுக்கப்படாது என உறுதியளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், அக். 28-க்குள் இம்ரான் கான் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற உத்தரவை நவ. 2 வரை நிறுத்திவைத்து இடைக்காலத் தடை விதித்துள்ளது.எஸ்ஐஆர்! கர்நாடகத்தில் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கம்!Order for actor Imran Khan to leave India: Court grants an interim stay!