நடிகர் அஜித் குமாரின் டெர் டெவில் திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித் குமார் குட் பேட் அக்லியைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ’டேர் டெவில்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை, பிரேவ் ஹார்ட்ஸ் புரடக்ஷன்ஸ் என்கிற பெயரில் ஷாலினி அஜித்குமார் தயாரிக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கிறார்.இப்படத்தில் நடிகை ஸ்ரீலீலா நாயகியாக நடிக்க உள்ளதாக எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், நடிகை கயாடு லோஹரை நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டாக தொடர்ந்து கார் பந்தயப் பயிற்சி மற்றும் போட்டிகளில் இருப்பதால் இப்படத்தின் படப்பிடிப்பு குறித்து எந்த அப்டேட்டும் வெளியாகமால் இருக்கிறது.இந்த நிலையில், டெர் டெவில் திரைப்படத்தின் பூஜை வருகிற நவ. 2 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாகவும் படப்பிடிப்பு தீபாவளி முடிந்து நவ. 12 ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.சுமோ திரைப்படத்திற்காக 15 கிலோ எடையைக் கூட்டிய நடிகை! Information has emerged regarding the shooting of actor Ajith Kumar's film 'Daredevil'.