புதுக்கோட்டையில் முதல்வர் விஜய் வருகையால் நவம்பர் 2-ல் மதுக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்ப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.புதுக்கோட்டை மாவட்டத்தில் நவம்பர் 2 ஆம் தேதியில் புதிய பேருந்து நிலையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கவுள்ளார். தொடர்ந்து, அரசு நலத்திட்ட விழாக்களிலும் முதல்வர் விஜய் கலந்து கொள்ளவிருக்கிறார்.முதல்வர் விஜய்யின் வருகையையொட்டி, மாவட்டத்தில் அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், அரசியல் பாகுபாடின்றி அனைத்து எதிர்க்கட்சி எம்எல்ஏ-க்களும் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்படும் என அமைச்சர் பர்வேஸ் தெரிவித்துள்ளார்.இதனிடையே, முதல்வரின் வருகையால் அன்றைய நாளில் மாவட்டத்தில் சில மதுக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின்படி, நவ. 2-ல் முதல்வர் வரக்கூடிய சாலையான மாத்தூர், கீரனூர், வெள்ளனூர் காவல் நிலையத்துக்குள்பட்ட 10-க்கும் மேற்பட்ட அரசு மதுபான கடைகள் மூடப்படவுள்ளன.கைதி தப்பியோட்டம்! மீண்டும் மீண்டுமா? மு.க. ஸ்டாலின் கேள்விLiquor shops to be closed on Nov. 2 in Pudukkottai due to CM Vijay’s visit