தமிழ்த் தொடரில் நடிக்கும் பாவனா!

Wait 5 sec.

நடிகை பாவனா தமிழ்த் தொலைக்காட்சித் தொடரில் நாயகியாக நடிக்கிறார். சித்திரம் பேசுதடி திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகி தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்தவர் பாவனா. நிறைய ஹிட்ஸ்களை கொடுத்த நடிகை என்பதால் பட வாய்ப்புகளும் அதிகரித்தன.இடையே, தனக்கு ஏற்பட்ட கசப்பான சம்பவத்தால் சில ஆண்டுகள் மலையாள சினிமாவிலிருந்து பாவனா ஒதுங்கியிருந்தார். தற்போது, மீண்டும் அனைத்து மொழிப்படங்களிலும் நடித்து வருகிறார். கடைசியாகத் தமிழில் தி டோர் என்கிற திரைப்படத்தில் நடித்தார். அப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இந்த நிலையில், தமிழில் சோனி விழா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள நோட்புக் 90’ஸ்: காதல் பிளாஷ்பேக் என்கிற தொடரில் முன்னணி நாயகியாக பாவனா நடிக்கிறார். இயக்குநர் மித்ரன் ஜவஹர் மேற்பார்வையில் இயக்குநர் சதாசிவம் இயக்கும் இத்தொடரில், இனக்கவர்ச்சியால் பள்ளி மாணவர்களிடையே உருவாகும் காதல்களால் ஏற்படும் பிரச்னைகளுக்கு நல்வழிகாட்டும் ஆசிரியையாக பாவனா நடிக்கிறாராம். 1990களில் பிறந்தவர்களின் கதையாக எடுக்கப்பட உள்ள இத்தொடர் முதலில் சோனி விழாவிலும் பின் சோனி லைவ் ஓடிடியில் வெளியாகிறது. துல்கரின் ஐஆம் கேம் பட ஓடிடி வெளியீட்டுத் தேதி! Actress Bhavana is playing the lead role in a Tamil television serial.