காவிரி டெல்டா பாசன பகுதிகளில் நடப்பு சம்பா பருவத்தில் 65 சதவீத அளவிற்கு சன்னரக நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக வேளாண் துறை அமைச்சர் வினோத் பேட்டியளித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே திருபுவனத்தில் உள்ள கூட்டுறவு சங்கத்தில் சிறப்பு மளிகை தொகுப்பு வழங்கும் திட்டத்தினை வேளாண் துறை அமைச்சர் வினோத் இன்று துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர், நடப்பு சம்பா பருவத்தில் காவிரி சமவெளி மாவட்டங்களில் 65 சதவீத அளவிற்கு சன்னரக நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கும்பகோணம் வட்டத்தில் 2,500 ஹெக்டேர் பரப்பிற்கு சன்ன ரக நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆடுதுறை 51, 54, 58, 61 என்ற ரகங்கள் சன்ன ரகத்தில் உள்ளது. மேலும் அதி சன்ன ரகம் நெல் சாகுபடி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். குத்தகை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைப்பதில்லையே? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.என் பாட்டி எனக்கு அளித்த அழகான பரிசு! இந்திரா காந்தியை நினைவு கூர்ந்த ராகுல் பிரியங்கா!