இந்தியாவில் மட்டும் ரூ. 500 கோடி வசூலித்த ஜெயிலர் - 2!

Wait 5 sec.

நடிகர் ரஜினிகாந்த்தின் ஜெயிலர் - 2 திரைப்படம் இந்தியாவிலேயே மிகப்பெரிய வசூலைச் செய்துள்ளது. ஜெயிலர் - 2 திரைப்படம் உலக அளவில் ரூ. 775 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், தமிழில் மட்டும் இப்படம் ரூ. 310 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாம். மேலும், தெலுங்கில் ரூ. 82 கோடி, கேரளத்தில் ரூ. 75 கோடி, ஹிந்தியில் ரூ. 47 கோடி, கன்னடத்தில் ரூ. 7 கோடி என வசூலித்துள்ளதகாவும் கூறப்படுகிறது. இதனால், இந்தியாவிலேயே இப்படம் ரூ. 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்தச் சாதனையைச் செய்த முதல் தமிழ்த் திரைப்படம் என்கிற பெயரையும் ஜெயிலர் - 2 திரைப்படம் பெற்றுள்ளது. நவ. 5 ஆம் தேதி வரை இப்படத்திற்கான திரை எண்ணிக்கையில் பெரிய மாற்றம் இருக்காது என்பதால் இன்னும் கூடுதல் வசூலைச் செய்யலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், 2.0, ஜெயிலர், கூலி, ஜெயிலர் - 2 என 4 ரூ. 500 கோடிக்கும் அதிகமான வசூல் திரைப்படத்தை ரஜினி கொடுத்துள்ளது ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசன் 7 நிமிட சிறப்பு விடியோ?Actor Rajinikanth's film Jailer 2 has achieved the highest box office collection in India.