பாஜகவை எதிர்ப்பவர்களின் வாக்குகளை நீக்கவே எஸ்ஐஆர் என காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சனிக்கிழமை (அக். 31) பேசியுள்ளார்.எஸ்ஐஆர் நடவடிக்கைகளை எதிர்த்தும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக தகுதி நீக்கத் தீர்மானம் கொண்டு வருவதற்காகவும் ஒரு மாதிரி நாடாளுமன்றத்தை தில்லியில் இந்தியா கூட்டணி நடத்தி வருகிறது.இந்த நிலையில் மாதிரி நாடாளுமன்றத்தில் கார்கே பேசியதாவது:இந்தியத் தேர்தல் ஆணையம் ஒரே இரவில் எஸ்ஐஆரை அறிவித்தது. பாஜகவை எதிர்ப்பவர்களின் வாக்குகளை நீக்கும் நோக்கில், இது நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டது. மோடி அரசு தனது தோல்விகளை மறைப்பதற்காக வெளியாட்கள் மற்றும் ஊடுருவல்காரர்களை எஸ்ஐஆருக்கான காரணங்களாக பயன்படுத்துகிறது.நாங்கள் ஊடுருவல்காரர்களை எங்களுடன் சேர்க்க முயற்சிப்பதாக அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அது உண்மையல்ல; நாங்கள் உண்மையான, சட்டபூர்வமான வாக்காளர்களைத் தக்கவைப்பதற்காகவே போராடுகிறோம். இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும். அவர் மீது தேசத் துரோகக் குற்றம் சாட்டி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.ஞானேஷ் குமார் விவகாரம்: இந்தியா கூட்டணி நடத்தும் மாதிரி நாடாளுமன்றம்!Senior Congress leader Mallikarjun Kharge stated on Saturday (Oct 31) that the 'SIR' (a reference to a specific administrative/voter-related process) is intended to remove the votes of those who oppose the BJP.