தேனி கைதிகள் விவகாரம்: சிறையின் பொறுப்பு கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம்!

Wait 5 sec.

தேனி சிறையிலிருந்து கைதிகள் தப்பிய விவகாரத்தில் மேலும் ஒரு அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் தேனி மாவட்ட சிறை உள்ளது. இந்தச் சிறையில் 334 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்த சிறையில் கடந்த திங்கள்கிழமை (அக். 26) இரவு 10 மணியளவில் 3-ஆவது அறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதி முத்து இளங்கோவனுக்கு வலிப்பு ஏற்பட்டதாக சக கைதிகள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, 3-ஆவது அறைக் காவலர் ஸ்டாலின் பிரபு அந்த அறைக்குச் சென்று பாா்த்தார். அப்போது, அந்த அறையிலிருந்த முத்து இளங்கோவன் உள்ளிட்ட 17 பேர் ஸ்டாலின் பிரபுவைத் தாக்கியதுடன், நுழைவு வாயிலிருந்த காவலர் தங்கபாண்டியையும் தாக்கி, அவரிடமிருந்த சாவியைப் பறித்து கதவைத் திறந்து தப்பிச் சென்றனர்.தப்பியோடிய கைதிகளில் 15 பேர் காவல்துறையின் அதிரடி தேடுதல் நடவடிக்கையால் அடுத்த 43 மணி நேரத்தில் கைதான நிலையில், இருவர் சரணடைந்தனர்.கைதிகள் தப்பிய விவகாரத்தில் அதற்கு மூளையாகச் செயல்பட்ட லிங்க பிரசாத் உள்பட 3 பேர் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.இந்த விவகாரத்தில், சிறைக் காவலர்கள் 9 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.இதனைத் தொடர்ந்து, அந்தச் சிறையின் பொறுப்பு கண்காணிப்பாளர் நாகேஸ்வரனை பணியிடை நீக்கம் செய்து மதுரை மத்திய சிறைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உத்தரவிட்டுள்ளார்.சிஜேபி இணை ஒருங்கிணைப்பாளா் இந்தியரா? விசாரிக்கக் கோரிய மனுவுக்குமத்திய அரசு பதிலளிக்க உத்தரவுTheni prisoners issue: Prison's in-charge superintendent suspended!