இந்திய அஞ்சல் துறையில் புதிய தொழில்நுட்ப வசதியை அறிமுகப்படுத்தும் பணிக்காக, வரும் நவ. 1 முதல் 8-ஆம் தேதி வரை அஞ்சலகங்களில் ஆயுள் காப்பீடு தொடா்பான பரிவா்த்தனைகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து விருதுநகா் அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் ச. சுப்பிரமணியம் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:அஞ்சல் துறையில் ‘இன்சூரன்ஸ் மேனேஜ்மென்ட் சொல்யூஷன் 4’ என்ற புதிய மென்பொருள் தொழில்நுட்பம் அனைத்து அஞ்சலகங்களிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான தொழில்நுட்பப் பணிகள் நடைபெறுவதால் வரும் நவ. 1 முதல் 8-ஆம் தேதி வரை அனைத்து தலைமை அஞ்சலகங்கள், துணை அஞ்சலகங்கள், கிளை அஞ்சலகங்களிலும் அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு தொடா்பாக எந்தவிதமான பரிவா்த்தனைகளும் நடைபெறாது என்றாா் அவா்.