மூக்குத்தி அம்மன் 2 படத்தின் ஆல்பம் புதன்கிழமை (அக். 28) வெளியானது.இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள படம் மூக்குத்தி அம்மன் 2. இந்தப் படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.இந்தப் படத்தில் சினேகா, ரெஜினா கேசண்ட்ரா, ஊர்வசி, அபிநயா, இனியா, மைனா நந்தினி, யோகிபாபு, துனியா விஜய்,ராமச்சந்திர ராஜு, அஜய் கோஷ், சிங்கம்புலி, விச்சு விஸ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.இந்தப் படத்துக்கு ஹிப்ஆப் ஆதி இசையமைத்துள்ள நிலையில், படத்தின் அனைத்துப் பாடல்களும் இன்று வெளியிடப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஸ்பாட்டிஃபை, யூடியூப் மியூசிக், ஜியோ சேவன் உள்ளிட்ட அனைத்து முன்னணி இசைத் தளங்களிலும் கிடைக்கின்றன.மேலும், படமானது வரும் நவம்பர் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.#MookuthiAmman2Album OUT NOW https://t.co/RvBwzf6I06A @sundarcoffl Spectacle Grand Diwali release on November 6, 2026#MookuthiAmman2FromNov6#Mahasakthi@IshariKGanesh @VelsFilmIntl #Nayanthara #VigneshShivan @khushsundar @AvniCinemax_ @Rowdy_Pictures… pic.twitter.com/BZwX8Pzub8— Vels Film International (@VelsFilmIntl) October 28, 2026ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஹரிஷ் கல்யாணின் நூறு கோடி வானவில்!The album for the film Mookuthi Amman 2 was released on Wednesday (Oct. 28).