மெக்சிகோ மருத்துவமனையில் சைபர் தாக்குதல்! மருத்துவ சேவைகள் முடக்கம்!

Wait 5 sec.

மெக்சிகோவில் உள்ள நியூ மெக்சிகோ பல்கலைக் கழக மருத்துவமனையில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால், மருத்துவ சேவைகள் முடங்கின. மருத்துவமனையின் டிஜிட்டல் சேவை வலையமைப்பு முடங்கியதால், நோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு, மருந்தக சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மெக்சிகோவில் செயல்பட்டு வரும் நியூ மெக்சிகோ மருத்துவப் பல்கலைக் கழக மருத்துவமனையில் ஆண்டுதோறும் 9,00,000 புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவசர சிகிச்சைப் பிரிவில் 1,00,000 லட்சம் பேர் வரை அனுமதிக்கப்படுகின்றனர். நகரத்தில் மிக முக்கிய மருத்துவமனையாக விளங்கி வரும் இந்த மருத்துவமனை, மெக்சிகோவில் முதல்நிலை விபத்து சிகிச்சை மையமாக உள்ளது.இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை (அக். 26) காலை நியூ மெக்சிகோ மருத்துவப் பல்கலைக் கழகத்தில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பல்கலைக் கழக மருத்துவமனையின் இணைய வலையமைப்பு முற்றிலும் மர்ம நபர்களால் கைப்பற்றப்பட்டது. இதன் விளைவாக, மருத்துவ சேவைகளை வழங்க முடியாமல், மருத்துவமனை நிர்வாகம் திணறியது. ஆம்புலன்ஸ் வாகனங்கள் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டன. நோயாளிகளும் வேறு மருத்துவமனைக்கு திருப்பிவிடப்பட்டனர். மருத்துவமனைக்குச் சொந்தமான 30க்கும் மேற்பட்ட மருந்தகங்களும் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டதால், நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மருத்துவமனையின் இணையம் முற்றிலும் முடங்கியதால், உள்நோயாளிகளின் சிகிச்சை தரவுகளை மருத்துவர்கள் கையேட்டிலோ அல்லது காகிதத்திலோ பதிவு செய்யும் நிலை ஏற்பட்டது. பையோட் என்ற என்ற இணையக் கொள்ளைக் கும்பல் இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது. மருத்துவமனை மற்றும் பல்கலைக் கழக தரவுகளை திருடியுள்ளதாகவும், ஊழியர்கள் மற்றும் மாணவர்களின் தனிப்பட்ட விவரங்கள், நோயாளிகளின் மின்னணு மருத்துவப் பதிவுகள், மின்னஞ்சல்களும் இதில் அடங்கும் என அந்த மோசடிக் கும்பல் தெரிவித்துள்ளது.மருத்துவமனையின் இணைய பாதுகாப்புக் குழுவின் தொடர் முயற்சியால், முக்கியமான மின்னணு அமைப்புகள் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக நியூ மெக்சிகோ பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.கற்பனையல்ல நிஜம்! 24 காரட் தங்கத்தினாலான உலகின் முதல் நடைபாதை! எங்கே?Cyberattack disrupts University of New Mexico hospitals